ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பெரியகுளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக விரும்புகின்றபடி ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார். ஓபிஎஸ் மகன் என்பதை தவிர ரவீந்திரநாத்துக்கு வேறு ஏதேனும் தகுதிகள் உள்ளது?ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ்-ஆல் சீட் வாங்கியிருக்க முடியுமா?
எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ். ஆட்சியை எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் துணை முதல்வராக இருக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.