மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் இல்லை என்பது வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது – கமல்ஹாசன்..!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தமிழகத்தில் இந்த கூட்டணிகளில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் தவிர்த்து வேறு யாரும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் ரவீந்திரநாத் குமாருக்குத்தான் அதிக வாய்ப்பு என கூறப்பட்டது.

ஆனால் விழா முடிவடையும் தமிழகத்துக்கான வாய்ப்பை பார்த்து பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம் என்ற அளவுக்கு ஆனது. எனினும் தமிழகத்தில் ஒரு கூட்டணி கட்சிக்கு கூட அமைச்சரவையில் பாஜக இடமளிக்கவில்லை. இதுகுறித்து திருச்சி செல்லும் போது கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் இல்லை என்பது வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது . தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கை யாகும் என்றார்.

 

Leave a Response