1 பேய் இல்ல, 2 பேய் : ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வரும் “தேவி 2”..!

2016ல் பிரபு தேவா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்த படம் தேவி. இப்படத்தினை ஏ.எல் விஜய் இயக்கினார். ஹாரர், காமெடி கலந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையிடப்பட்ட இப்படத்தில் தமன்னா கிராம பெண்ணாகவும், நகர பெண்ணாகவும் இரு வேறு தோற்றங்களில் நடித்திருந்தார். கிராம பெண் வேடத்தில் மிகவும் அடக்கமான பெண்ணாகவும், ஹீரோயினாக மாறும் இரண்டாம் கட்டத்தில் படு கிளாமராகவும் நடித்து அசத்தி இருந்தார்

மேலும் பிரபு தேவாவின் மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் நடனத்திற்கு பஞ்சம் இல்லை. இதனையடுத்து, தேவி படத்தின் இரண்டாம் பாகம் படமாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏ.எல் விஜய் படபிடிப்பு பணிகளை தொடங்கினார். பிரபு தேவாவும், தமன்னாவுமே இப்படத்திலும் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்ரல் 5ல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 12ல் படம் திரையிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேவி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரின் மூலம் தேவி 2 படத்தில் ஆண் பேய் ஒன்றும், பெண் பேய் ஒன்றும் இடம் பிடித்துள்ளது தெரிகிறது. மேலும் கோவைசரளா தனக்கே உரித்தான பாணியில் “ஒரு பேய் இல்ல ரெண்டு பேய்” என கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Response