இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு..!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்றனர்.

தமிழக சட்டப் பேரவையில் காலியாக இருந்த 22 இடங்களுக்கு அண்மையில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுகவைச் சேர்ந்த 13 புதிய உறுப்பினர்களும் எம்எல்ஏக்களாக செவ்வாய்க்கிழமை நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 9 பேரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் காலை 9.30 மணியளவில் எம்எல்ஏக்களாக இன்று புதன்கிழமை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.

9 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 123-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Response