விரைவில் ஆரம்பமாகிறது இன்று நேற்று நாளை படத்தின் 2ம் பாகம்…

திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரித்து 2015ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் தான் ‘இன்று நேற்று நாளை’. இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் காதநாயகியாகவும் நடித்தனர். இப்படத்தில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியவர் ஆர்.ரவிக்குமார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திருக்குமரன் என்டர்டைன்மெண்ட் முடிவெடுத்து, இப்படத்தின் கதை எழுதும் பணி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. முயகள் பாகத்தை எழுதி இயக்கிய ஆர்.ரவிக்குமார் தான் இப்படத்தின் இரண்டாம் பாக கதையை எழுதி வருகிறார். கதை எழுதும் பணிக்காக இந்த ரவிக்குமாருக்கு மட்டும் ஒரு பெரிய தொகையை சம்பளமாக பேசியுள்ளார் தயாரிப்பாளர். அதிலும் தயாரிப்பு நிறுவனம் கதை எழுதும் ரவிக்குமாருக்கு 50 சதவீத சம்பளத்தை முன்பனமாக கொடுத்துள்ளனராம்.

‘இன்று நேற்று நாளை’ படத்தினை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமாரின் இணை இயக்குநர் ஒருவர் இப்படத்தினை இயக்கவிற்கிறார். ‘மாயவன்’, ‘மாநகரம்’ படங்களில் நாயகனாக நடித்த சந்தீப் கிஷன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த மியா ஜார்ஜ் இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு செல்வதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து, படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாம்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘டைட்டானிக்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response