கருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் – தமிழிசை சவுந்தரராஜன்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 39 மக்களைவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

முன்னதாக, மத்தியில் பாஜகவுக்கு இடங்கள் கூடுமே தவிர, குறையாது என்று பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் என்றார்.

கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் என்றும் கூறினார். இதே போல், மத அடையாளத்தை பிரதமர் மோடி பயன்படுத்தியதாக கூறிய முன்னாள் மத்தியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பதலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்த தமிழிசை,

பெயில் வாங்கி வெள்ளி விழா முடிந்து நீங்கள் சரணடைவது எப்போது? தேர்தல் நேரம் வந்தால் மட்டும் கோயில் யாத்திரை செல்லும் ராகுல் பிரியங்கா? தேர்தல் முடிந்ததும் திகார்? பயமா?பசி?பதவிப்பசி?பரிதவிப்பா?? என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Response