கரோனாவால் பாதிப்படைந்தவர்களை விட அலட்சியத்தால் பாதிப்படைந்தவர்களே அதிகம் – கமல்ஹாசன்..

கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களை விட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அங்குமட்டும் 24 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பல ஏழை தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு பல தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்துவருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இளைஞர்களே! நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வேலை இழந்து தவிக்கும் ஏழை தொழிலாளர்களுக்கு உதவி புரிய தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்களை அழைக்கும்விதமாக கமல்ஹாசனின் ஒரு வீடியோ இருக்கிறது. மற்றொரு வீடியோ, கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இளைஞர்களை அழைக்கும்விதமாக உள்ளது.

 

Leave a Response