இந்தியாவில் கொவிட் 19! 2021 நவம்பர் 27ம் தேதி தகவல்

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 121.06 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.34 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 10,967 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,88,797 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,07,019.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.31 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

தினசரி பாதிப்பு விகிதம் 0.86, இது கடந்த 54 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

வாராந்திர பாதிப்பு விகிதம் 0.88 ஆகும். இது கடந்த 13 நாட்களில் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 63.82 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Response