சென்னை தபால் நிலையத்தில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்…

சென்னை வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. அந்த பார்சலில் 52 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள், 5 கிராம் மெத் கிரிஸ்டல் மற்றும் 128 கிராம் கஞ்சா கொண்ட மூன்று பார்சல்கள் இருந்துள்ளன. போதை பொருட்கள் கொண்ட பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுசெய்தனர்.

நெதர்லாந்தில் இருந்து வந்த முதல் இரண்டு பார்சல்களும் மதுரையில் வசிக்கும் இரு வேறு நபர்களின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்தன. முதல் பார்சலைத் திறந்து பார்த்தபோது, ​​எம்.டி.எம்.ஏ என சந்தேகிக்கப்படும் மொத்தம் 28 கிராம் எடை கொண்ட 52 பச்சை நிற மாத்திரைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ 2.6 லட்சம் ஆகும். இரண்டாவது பார்சலில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 5 கிராம் மெத் கிரிஸ்டல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்றாவதாக இருந்த பார்சல் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. இந்த பார்சல் சென்னையைச் சேர்ந்த நபருக்கு அனுப்பப்பட்டு, “பெண்களுக்கான அத்தியாவசியப் பரிசு” என்று அதன் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சலை சோதனையிட்டதில், 128 கிராம் கஞ்சா அதில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட மூன்று பார்சல்களில் இருந்தவற்றின் மதிப்பு ரூ 3.12 லட்சம் ஆகும். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று முதன்மை சுங்கத்துறை ஆணையர், சென்னை விமான நிலைய ஆணையரகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response