4 பாராளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தமிழகம் வருகிறார்.
ஏற்கனவே சென்னை வண்டலூர் அருகே நடந்த பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரதீய ஜனதா தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள். மிக பிரமாண்டமாக இந்த பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து 2-வது கட்டமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி 8-ம் தேதி தமிழகம் வருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார். 2-ம் தேதி அன்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தமிழகத்துக்கு பிரச்சாரம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.