பாஜக- அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும், இதனால் ஸ்டாலின் மிகவும் கவலை அடைந்துள்ளார் – தமிழிசை சௌந்தரராஜன்..!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , “டெல்லியில் பிரச்சாரம் மேற்கொள்ள செல்வதாகவும், அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பாஜக- அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால் ஸ்டாலின் மிகவும் கவலை அடைந்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக உள்ளது. 1975ம் ஆண்டில் பத்திகையாளர்கள் சுதந்திரத்தை தடுத்தவர்கள் தற்போது பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் சூழல் உள்ளது.ஒரு கருத்து கூறியதற்காக தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்ட சரித்திரம் தமிழகத்தில் உள்ளது. கட்சிகள் கருத்து சொல்வதற்கே உரிமை இல்லாத சூழலில் இருந்த நாம் தற்போது சுதந்திரமாக உள்ளோம் என தெரிவித்தார்.

தமிழில் நீட் எழுதும் மாணவர்கள் தமிழகத்தில் தான் எழுதுவார்கள் எனவும் கடந்த முறை அதிக மாணவர்கள் நீட் எழுதியதால் தான் வெளி மாநிலங்களில் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியது என்றார். மேலும் கடந்த முறையை விட இந்த முறை அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும், அடுத்தமுறை அனைத்து குறைகளும் சரிசெய்யப்படும் எனவும் கூறினார்.

கடலூரில் புயல் வந்த போது, அழகிரி, பா.சிதம்பரம் உள்ளிட்டோர் எங்கே சென்றனர் எனவும் புயல் பாதித்த பகுதிகளை மன்மோகன் சிங்பார்வையிட வந்தாரா எனவும் கேள்வி எழுப்பிய தமிழிசை பிரதமர்மோடி புயல் பாதித்த முதல் நாளே டுவிட்டரில் தனது பதிவை பதிவு செய்ததாக கூறினார்.

Leave a Response