திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை அறிவித்தபடி அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பம் தொடங்கியது.

திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதன்முறையாக அவர் தலைமையில் இன்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், ஐ.பெரியசாமி, விபி துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பற்றியும், திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல்கள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் கட்சிக்காக நிதி திரட்டுதல், திமுக முப்பெரும் விழா குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், கடந்த 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்திய மு.க அழகிரி, “பேரணியில் பங்கேற்ற திமுக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” என்று அழகிரி, ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதுகுறித்தும் இன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Response