கருணாநிதியின் அமைதி ஊர்வலத்திற்கு அழகிரி கூட்டியது பெரிய கூட்டம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி தனது பலத்தை காட்டுவதற்காக கடந்த 5ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி பேரணி ஒன்றை நடத்தினார்.
இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அழகிரியின் பேரணி அரசியல் கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் அழகிரிக்கு வந்த கூட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூவும் புகழ்ந்து பேசியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கருணாநிதியின் நினைவஞ்சலி பேரணியில் அழகிரி மிகப்பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி கருணாநிதி மறைவுக்கு அமைதி பேரணியை நடத்தியது அழகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு இருப்பதை காட்டுகிறது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அவருக்கு எவ்வளவு ஆதரவு என்பது தேர்தலின் போது தான் தெரியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். ஏற்கனவே அழகிரியின் பேரணிக்கு அதிமுக அரசு மறைமுகமாக வேலை செய்தது என தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அழகிரியை புகழ்ந்து பேசியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் அழகிரி புகழாரம் அவரது பிஆர்ஓ போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.