தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கதாநாயகியாக மட்டுமின்றி, சோலோ ஹீரோயினாகவும் நடித்து தடம் பதித்து வருகிறார்.
இவர் சோலோ ஹீரோயினாக நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் கடைசியாக வெளியான சில படங்களுக்கு அதிகாலை காட்சி போட்டு மாஸ் ஹீரோ படம் ரேஞ்சிற்கு படத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
அதேபோல தற்போது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளியாக உள்ள ஐரா படத்திற்கு சென்னை, ஜிகே சினிமாஸில் பெரிய ஹீரோ படங்களுக்கு அதிகாலை 5 மணி ஷோ கொடுப்பது போல இந்த படத்திற்கும் அதே அதிகாலை 5 மணிக்காட்சி திரையிடப்பட உள்ளது.
இப்படத்தில் கலையரசன், யோகிபாபு ஆகியோர் உடன் நடித்து உள்ளனர். சர்ஜுன் இப்படத்தை இயக்கியுள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் சில ப்ரோமோ காட்சிகள், ட்ரைலர் என பலவும் ரசிகர்களை கவரும் படி அமைந்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.