“படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க” இயக்குநரை புகழ்ந்த நட்டி..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உறுவாகி வரும் படம் தான் ‘கர்ணன்’. தனுஷின் 41-வது படமான இதில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த கர்ணன் படத்தின் கதைக்களம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் இந்த படத்தின் 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டது என்றும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழுமையும் நிறைவடைந்து விட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தார் தனுஷ்.

இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல நடிகர் நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “மாரி செல்வராஜ்..  ஆக சிறந்த இயக்குனர்…. படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க….” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response