NEET தேர்விற்காக இலவச ஆன்-லைன் பயிற்சி – தமிழக அரசு..

தமிழக அரசு உரங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

தற்போது இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்விற்காக தமிழக அரசு ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக ஆன்-லைன் இலவச பயிற்சி வழங்க தமிழக அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என ஆன்-லைன் வகுப்பு நடைபெற உள்ளது. ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Response