தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் இருந்து பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இங்கு பெய்த மோசமான மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் பல பகுதிகளில் இருக்கும் பல ஏரிகள் நிரம்பி இருப்பதால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இன்று காலையில் இருந்து சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்தது. இதையடுத்து தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இந்த மூன்று மாவட்டங்களிலும் தொடர்ந்து 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.