பந்துவீச்சை தேர்வு செய்த நியூசிலாந்து, அதிரடிகாட்டிய இந்தியா! 203 ரன் இலக்கு நிர்ணயிப்பு!

ICC_18095
இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங்க்கை தேர்வு செய்த இந்திய அணி ரோகித், தவாண் அதிரடியில் 202 ரன்களை எடுத்துள்ளது
சர்வதேச டி20 போட்டியில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை முதல்முறையாக வெல்லும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய 5 டி20 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவின் ஃபேர்வெல் போட்டியாகும். இந்தப் போட்டிக்குப் பின்ன,ர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நெஹ்ரா ஏற்கெனவே அறிவித்திருந்தார். போட்டிக்கு முன்பாக நெஹ்ராவைக் கவுரவிக்கும் வகையில் டிராபி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்களான தோனி, விராட் கோலி வழங்கினர். மேலும், இந்தப் போட்டி மூலம் இந்திய அணி தரப்பில் ஷ்ரேயாஸ் ஐயர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிறார்.
இப்போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி ரோகித், தவாண் அதிரடியில் 3விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்துள்ளது. தவான் 52 பந்துகளுக்கு 80 ரன் களும்(10-4, 2-6) , எடுத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்து தவாண் வெளியேற அதன் பிறகு களமிறங்க்கிய பாண்ட்யாவும் ரன் ஏதுமின்றி தொடர்ந்து வெளியேறினார்.
அதன்பிறகு களமிறங்கிய கோலி அதிரடியை காட்ட மறுமுனையில் ரோகித் சர்மாவும் சேர்ந்து மைதானத்தில் ரன் மழை பொழிந்தது. ரோகித் சர்மா 55 பந்துகளுக்கு 80ரன்களும் (6-4, 4-6) எடுத்து வெளியேறினார்.
20 ஓவர்முடிவில் இந்திய 3விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்தது. கோலி 11 பந்துகளில் 27(3-6) ரன்னும், டோனி 2-பந்துகளில் 7 (1-6) ரன்களுடன் ஆட்டமிழக்கமாமல் இருந்தனர் .

Leave a Response