தமிழகத்தில் தொடரும் கனமழை; 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !

pic (2)
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, மின் இணைப்பு துண்டிப்பு என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் மூன்றாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் விடிய, விடிய லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது இந்நிலையில் மழை காரணமாக நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போன்று நாகை மாற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Response