சென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழப்பு..

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 167 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,9,459 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,066 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் 17 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளார் 3 ஆம் தேதி மாலை 5.28 சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இரவு 9.35 மணிக்கு உயிரிழந்தார்.

முன்னதாக இரண்டாம் தேதி அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் கொரோனா பாஸிட்டிவ் உறுதியானது. ஏற்கனவே அந்தபெண்ணுக்கு முதல் வகை நீரிழிவு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,901 ஆக அதிகரித்தது.

Leave a Response