இந்தியாவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 2,16,919 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 273 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,10,960 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 33,681 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டில் 27,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 14,902 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Response