இதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்.. 

தமிழகத்தின் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக, நேற்று தமிழக அரசு சென்னை மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் வரும் ஜூன் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் கட்டணம் ஏதுமின்றி உணவு வழங்க வேண்டும்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதைத் தொடர்ந்தால்தான் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிற தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும்.

எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

Leave a Response