ஒரே நாளில் 2259 பேருக்கு நோய்தொற்று : மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா..

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2259 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 90,787 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 3289ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே 42638 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வீடுகளில் 5,68,073 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் மும்பையில் மட்டும் 51100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டுமே 1760 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 307 பேர் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Leave a Response