அரசு பேருந்து நேரத்திற்கு வராததால் 4 கி.மீ நடக்கும் நரிக்குடி மாணவர்கள்!

arasu
நரிக்குடி கட்டனுாரில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. நாலுார், கடுக்காய்குளம், சீனிமடை, உளுத்திமடை, செங்கமடை, புதையனேந்தல் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மாணவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.

காலை பள்ளி செல்லவும், மாலை வீட்டிற்கு வருவதற்கும் இங்கு நேரத்திற்கும் அரசு பஸ் வருவதில்லை. அதனால் சிலர் தனியார் பஸ்சில் கட்டணம் செலுத்தி பள்ளி செல்கின்றனர்.

மற்ற மாணவர்கள் நான்கு கி.மீ., துாரம் நடந்து செல்கின்றனர். குறிப்பாக மாணவிகள் அதிகம் சிரமப்படுகின்றனர். சாலை இருபுறமும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. பாதுகாப்பின்றி பள்ளி செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் காலை பத்து மணிக்கு வரவேண்டிய அரசு பஸ் நேரன் கடந்து வருவதால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி நேரத்திற்கு அரசு பஸ்சினை இயக்க வேண்டும் என மாணவர்கள் வேண்டுகோளாக உள்ளது.

நாலுாரில் உள்ள மாணவர் தமிழ்செல்வன் கூறுகையில்:- ”100 மாணவர்களுக்கு மேர்ப்பட்டோர் இந்த கட்டனுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்கிறோம். அரசு பஸ் வசதி இல்லை. தனியார் பஸ்சில் தினமும் பணம் கொடுத்து செல்வது சிரமமாக உள்ளது. பள்ளி நேரத்திற்கு அரசு பஸ் இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார். மேலும் இதற்கு தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Response