நீட் தேர்வுக்காக வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும்-மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!

வெளி மாநிலம் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு விமான கட்டணம், பெற்றோருடன் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்து தர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள்ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆகவே கூடுதல்தேர்வு மையங்கள் ஏற்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.

ஆனால், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க போதிய காலம் இல்லை என்று சிபிஎஸ்இ பதிலளித்தது. சிபிஎஸ்இகோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்து. தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்ததேர்வு மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு விமான கட்டணம் பெற்றோருடன் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கோவையில், செய்தியார்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் அவருடன் செல்லும் பெற்றோருக்கு விமான கட்டணம், தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் ரவீந்திரநாத், அரசு நினைத்தால் தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் உருவாக்க முடியும். வெளி மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும என்று கூறினார். இது தமிழக மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசோடு தமிழக அரசும் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே இது கருதப்படும் என்றும் ரவிந்திரநாத் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நீட் தேர்வு மையங்களை அதிகப்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.

Leave a Response