நீட் தேர்வு : நெல்லையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் சிறப்பு பேருந்துக்கள்..!

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் தேர்வு மையங்களை மாற்ற சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து விட்டது.சுப்ரீம் கோர்ட்டும் தேர்வு மையங்களை மாற்ற உத்தரவிட மறுத்து விட்டது. இதனையடுத்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2 ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் இன்றே புறப்பட்டு செல்கின்றனர்.

நெல்லை மண்டலத்தில் மட்டும் 2300 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்வறத்காக நெல்லையில் இருந்து இன்று காலை 7.30 மணி முதல் இரவு வரை 8 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களை இலவசமாக அழைத்து செல்ல உள்ளது.

இந்த சிறப்பு பஸ்களை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர், மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில், சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தனர்.

Leave a Response