22 வயது இளைஞரின் உடல் உறுப்புகளால் 6 பேருக்கு மறுவாழ்வு!..

brain
மூளைச் சாவடைந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

அகமதாபாத்தில் உள்ள ஜிவ்ராஜ்பூங்கா பகுதியில் வசித்து வரும் ரவி டி தேவானி(22), இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பனி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்புபோது, பசு மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அவரது தலையில் பலமான காயம் ஏற்பட்டு பிரபல நியுரோ கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில்ரத்தம் உறைந்ததையடுத்து கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரவிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சூரத் யூனிட்டி மருத்துவனைக்கு மாற்றப்பட்ட பின் மூளைச் சாவடைந்தார்.

இதையடுத்து, ரவியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இது குறித்து ரவியின் தந்தை தகர்சி தேவானி கூறுகையில், எங்களது மகனின் உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கு பயனபடட்டும். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

அகமதாபாத்தில் உள்ள சிறுநீரக மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ரவியின் கல்லீரல், கணையம் மற்றும் சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டது. போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரவியின் இதயம் தானமாக கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. மேலும், சூரத்தில் உள்ள உமாங் பட்டேல்(31) என்பவருக்கு ரவியின் கல்லீரல் தானம்செய்யப்பட்டது. ரவியின் கண், கணையம் மற்றும் சிறுநீரகம் மேலும் 4 பேருக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.

Leave a Response