உள்ளாட்சி தேர்தல், ஜூலை மதம், உயர்நீதிமன்றம் உத்தரவு!..

high_court
ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி, மாநில தேர்தல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சித் தேர்தலை முறையான அறிவிப்பு வெளியிட்டு நடத்தக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதன்பேரில், 2016 அக்டோபரில் அவசர கதியில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்துவிட்டு, டிசம்பருக்குள் புதிய அறிவிப்பு வெளியிட்டு, தேர்தலை நடத்தும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்ததால், 2017 மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுவும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, ஜூலை மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதாக, மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போதைய நடவடிக்கை பற்றி, நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஜூலை மாதத்திற்குள் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி, விசாரணையை, வரும் 24ம் தேதிக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

தொடர்ந்து, காலக்கெடு கூறிவந்த நிலையில், தற்போது ஜூலை மாதத்திற்குள்ளாக, உள்ளாட்சித் தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் நடத்துமா, இல்லையா என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Response