நம் தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலின் பேரில் தமிழகமுதல்வராக திரு ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியின் உள்பூசல் விவகாரங்களால் கட்சி அதிமுக சசிகலா அணி என்றும், ஓபிஎஸ் அணி என்றும் இரண்டாகப் பிரிந்தது.
இந்நிலையில், தற்போது டிடிவி தினகரன் செய்யும் கேவலமான செயல்களால் சசிகலாவின் குடும்பம் தமிழகத்தை ஆளாக்கூடது எனவும் அவரை கட்சியிலிருந்தும், பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக கட்சி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தகவலை அடுத்து அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருந்தும் 8 அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாகஉள்ளனர். இதன் காரணமாக தற்போது மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது.
இந்தநிலையில் தமிழத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மலருமா அல்லது ஆட்சி கலைக்க படுமா என்று மக்கள் மனதில் கேள்வி எழுபியுள்ளது.