எச் ராஜா பேசினால் காந்திக்கே கோபம் வரும் – டிடிவி தினகரன்..!

பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பேசினால் காந்திக்கு கூட கோபம் வந்து விடும் என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பாஜக வேட்பாளராக எச் ராஜா போட்டியிடுகிறார். திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரமும் அமமுக சார்பில் தேர் போகி பாண்டியும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோரை ஆதரித்து அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில் 40 சுயேச்சைகளும் இந்தியாவின் பிரதமரை தீர்மானித்தார்கள் என்ற சாதனையை நாம் உருவாக்க வேண்டும். சிவகங்கை வேட்பாளர் எச் ராஜா பேசினால் காந்திக்கு கூட கோபம் வரும். அவரது நாக்கில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார் என்றார் தினகரன்.

Leave a Response