பொல்லாதவன், ஆடுகளம் இயக்கிய பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் கனவு படமான வடசென்னை’ திரைப்படத்தில் அமலாபாலுக்கு, பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வடசென்னை திரைப்படத்தில், இத்துடன் மூன்றாவது முறையாக கதாநாயகிகள் மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தில் முதல் முதலாக நடிகை சமந்த ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சில காரணகளால் அப்படத்தில் இருந்து விலக நேர்ந்தது, பிறகு அமலாபால் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் இவருக்கும் தேதிகள் ஒதுக்குவதில் சில சிரமம் ஏற்படுகிறது ஆகையால் தற்போது இவருக்கு பதிலாக காக்க முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இதுகுறித்து படக்ழுவினர் கொடுத்த விளக்கமாவது ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களின் பணிகள் இருப்பதால் அமலா பால் வடசென்னையில் இருந்து விலகியுள்ளார். வடசென்னை படப்பிடிப்புக்காக திட்டமிட்ட தேதிகளுடன் அமலா பாலின் தேதிகள் ஒத்துப்போகாததால் அவரால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. ஆகையால் அவருக்கு பதில் ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஐஸ்வர்யா ஏற்கனவே தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘வடசென்னை’ திரைப்படம் வடக்கு சென்னையின் சேரி பின்னணியில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.