டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில் சமீபத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தினகரன் தனது கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்குகுக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம்விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதற்கிடையே திருவாரூர் இடைத்தேர்தல் திடீர் என்று ஒத்தி வைக்கப்பட்டது. என்றாலும் தினகரன் தாக்கல் செய்த மனு விசாரணை நடந்தது.

அப்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் இன்று பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன் படி தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது.

அதில் அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்றும் அதற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response