எந்த வடிவில் வந்தாலும் ஹிந்தியை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார்..!

எந்த வடிவில் வந்தாலும் ஹிந்தியை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடபெற்ற திருவையாறு இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ” அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.ராஜா, தான் செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையிலேயே இணைத்துள்ளோம். இது சசிகலா, தினகரன் குடும்பத்தார் தவிர்த்து அனைவருக்கும் பொருந்தும் என்றார்.

மேலும் கஜா புயல் நிவாரணப் பணிகள் சரியாக நடந்து வருகிறது. மத்திய அரசு தற்போது தமிழக அரசிடம் உள்ள பேரிடர் நிதியிணை பயன்படுத்திக்கொள்ள கூறியுள்ளது. கஜா புயல் நிவாரணநிதியாகதமிழக அரசு முன்வைத்த நிதியை கண்டிப்பாக பெற்றே தீரும் என கூறினார்.

மத்திய அரசுசி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி கட்டாயம் என அறிவித்துள்ளதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழகத்தில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான். எந்த வடிவில் வந்தாலும் ஹிந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் தெளிவாக அரசின் நிலைமையை எடுத்து கூறினோம். எந்த இடத்திலும் அரசு அவர்களை உதாசீனம் படுத்தவில்லை. அரசின் நெளிவு சுழிவுகளை இடைநிலை ஆசிரியர்கள் புரிந்துகொண்டு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம்அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும். அந்த அறிக்கையை வெளியிட முடியாது எனதெரிவித்தார்.

Leave a Response