ச்சே! கல்வி நிறுவனங்களில் இவ்வளவு அட்டூழியங்கள் இருக்கிறதா?

Yeidhavan_Kalaiyarasan
செய்தி தலைப்பை பார்தவுடன் என்னடா அட்டூழியம்? என்று யோசிக்கிறீங்களா?? ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. சீட் வேண்டுமென்றால் குறைந்தது ரூ.1௦௦௦௦ முதல் பல லட்சம் வரை எந்த வித ரசிதும் இல்லாமல் நன்கொடையாக பெறப்படுகிறது. அதுவே கல்லூரிகள் என்றால் அதோட ரேட்டே வேற. தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு பல கோடிகள், பொறியியல் படிப்புக்கு பல லட்சங்கள் என வெவ்வேறு படிப்புகளுக்கு விதவிதமாக பெயர் சொல்லி காசு புடுங்குறாங்க என்பதில் ஒரு சில தனியார் கல்லூரிகளை தவிர அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

சரி காசை தான் கட்டிவிட்டுடோமே, புள்ளைங்க நல்லா தான் படிப்பாங்க என்று பெற்றோர் நினைத்தாலும் அதில் சில நேரங்களில் தப்பாகுகிறது. காரணம் கல்லுரி அருகில் இருக்கும் பெட்டி கடைகளில் தடைகளை மீறி விற்கப்படும் புகையிலை வஸ்து பொருட்கள் மற்றும் மதுபான கடைகள். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் அந்த தீய பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இது பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் மீதான நம்பிக்கையில் பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது.

நன்கொடை கொடுத்து படிக்கும் மாணவர்களிடம், நாம் லட்சம், கோடி என பணம் கொடுத்துள்ளோம் என அவர்களே அறியாதளவு கர்வம் இருப்பதுண்டு. ஒரு சில மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லூரியில் நடக்கும் அட்டூழியம் மற்றும் அவலங்களை பற்றி நிர்வாகத்தை தட்டி கேட்பதுண்டு. இந்த துணிச்சலான மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தால் கண்காணிக்கப்படுவார்கள். அத்தகைய மாணவர்கள் படிப்பில் திறமையானவர்களாக இருந்தாலும், அந்த கல்வி நிர்வாகத்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.

ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட சென்னை புறநகரிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் தற்கொலை மேற்கொண்டனர். கல்வி நிர்வாகத்தின் கொடுமையால் தான் அந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று சக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் கல்வி நிர்வாகம் அவர்களிடம் உள்ள பண பலத்தை கொண்டு அந்த கேஸையே அந்த கல்வி நிர்வாகத்துக்கு சாதகமாக நடத்தி கொண்டது. இது இந்த ஒரு கல்லுரி மட்டும்மல்ல, இப்படிப்பட்ட பல விதமான தற்கொலை, கொலை, பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் என பல தனியார் கல்லூரிகளில் நடைபெறுகிறது.

தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படும் அவஸ்தைகள், தனியார் கல்வி நிர்வாகம் செய்யும் அட்டூழிங்களை வெளிச்சம் போட்டு காட்ட வருகிறது “எய்தவன்” என்ற ஒரு தமிழ் திரைப்படம். இப்படத்தை எஸ்.சுதாகரன் அவர்கள் தயாரிக்க, சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கலையரசன் கதாநாயகனாகவும், சத்னா டைட்டஸ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘ஆடுகளம்’நரேன், வேலா ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு நா.முத்துகுமார் மற்றும் கானா வினோத் பாடல்கள் எழுத, பார்தவ் பார்கோ இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சி.பிரேம்குமார் கையாள, ஐ.ஜே.ஆலன் படத்தொகுப்பை செய்துள்ளார்.

தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அட்டூழியங்கள் இவ்வளவா? என மக்கள் சிந்திக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த திரைப்படம் மே மாதம் 5’ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. படம் வரட்டும், கல்வி துறையில் மாற்றம் ஏற்படுகிறதா என பார்ப்போம்.

Leave a Response