இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து பல தரமான படங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் தயாரித்து வரும் படம் “குதிரை வால்’. கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்குகிறார்கள். ராஜேஷ் கதை எழுதியுள்ளார். இது அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் சினிமாவாகவும் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இது புதிய முயற்சியாக இருக்கும் என நீலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் சார்பாக விக்னேஷ் சுந்தரேசன் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்
மார்ச் 4 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது குதிரைவால் திரைப்படம்.