மதபிரச்சைனையை ஏற்படுத்தும் விதமாக பாடலைப் பாடிய இசைவாணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அவர் பாடிய பாடலான ”ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி” என்கிற அந்தப்பாடலில், ”தீட்டான துப்பட்டா உன் சடங்கை காரித்துப்பட்ட..” என்கிற வரிகள் இன்னும் கொதிப்படையச் செய்துள்ளது.
ஐயப்பன் சுவாமி கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை உள்ளது. அதனை மீறி உள்ளே வந்தால் என்ன நடக்கும்? எங்களை அடக்கி வைக்க இது பழைய காலம் இல்லை. ஏனென்றால் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியாரின் பேத்தி என்ற வகையில் அந்த பாடல் பொருள் தருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ரஞ்சித் மற்றும் இசைவாணிக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அவருக்கு ஆதரவாக, ”சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல். இசைவாணி ஒரு இந்து பெண்மணி அவருடைய அப்பாவின் பெயர் சிவக்குமார். இந்த பாடல் வந்து 5 வருடம் ஆகி விட்டது” என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அவரது பாணியிலேயே, I am sorry ஐயப்பா”… நான் உள்ள வந்தா என்னப்பா? என்கிற பாடலுக்கு போட்டியாக இசைவாணிக்கு பதிலடி தரப்பட்டுள்ளது.
https://x.com/NaMo_Bharathan/status/1861648212240805972?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1861648212240805972%7Ctwgr%5E52dd5778ff1dcb57ac02d40dd73cfcdebbce0454%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
சமூகவலதளங்களில் வைரலாகி வரும் அந்தப்பாடலில், ”ஐ ஆம் சாரி சொறியானே…
ஐயன் எங்கள் மெய்யானே… ஆன்மீகம் எங்கள் மண்ணே… உன் பொண்டாட்டி உன்னுடைய பெண்ணே… பதினெட்டு படியின் புண்ணியம் தெரியும் எங்கள் பெண்ணுக்கு… பர்தாவ கழட்டி போட்டு முடிஞ்சா… பாபரை வணங்கு புண்ணாக்கு… நாடெங்கும் நாத்திகம் நாறிப்போச்சு… நாடே எங்கள் வசம் மாறிப்போச்சு…
ஆணியில தொங்குறியே நீ என்ன காலண்டரா… அகிலம் காக்கும் ஐய்யப்பனே எங்கள் ஆண்டவராம்… காவல் தெய்வம் கருப்பன் வருவான்…. கருப்பர் கூட்டம் கருவ அறுப்பான்” எனப் பாடப்பட்டுள்ளது.