இயக்குனர் பா ரஞ்சித் மீது வழக்குபதிவு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில், புதிதாக கட்டி வந்த இல்லத்தின் முன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அம்ஸ்ட்ராங்கை தாங்கள் தான் கொலை செய்தோம் என 8 பேர் முதலில் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அதன் பின்னர், இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் முதற்கட்டமாக ஆஜரான 8 பேரில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் தப்பிக்க முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதுவரை திமுக, அதிமுக, தமாக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் உள்ளவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக காவல்துறை கைது செய்துள்ளது. இது மட்டும் இல்லாமல், சிறையில் இருந்துகொண்டே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பலரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் நேற்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் தீனா உள்ளிட்ட 1500 பேர்மீது நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான செய்திகள் இணையத்தில் தற்போது அதிகம் உலா வருகின்றது.

அதாவது, ” சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ராங்கின் மனைவி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”. ஏற்கனவே கடந்த ஜூலை 20ஆம் தேதி இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் நினைவேந்தல் பேரணி நடத்தப்பட்டது. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது தங்கலான் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. அந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response