பன்றிக்கு நன்றி சொல்லி – திரை விமர்சனம்

இயக்கம் – பாலா அரண்
நடிகர்கள் – விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், நிஷாந்த்
இசை சுரேன் விகாஷ்

ப்ளாக் காமெடியில் புதிய முயற்சியாக இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம்தான் “பன்றிக்கு நன்றி சொல்லி”.

புராணகாலத்து புதையலான பன்றி சிலைக்கு ஒரு ரௌடி, போலீஸ், ஒரு இயக்குநர் என மூவர் போட்டி போடுகிறார்கள்.

சில வருடங்கள் முன் ஒரு ஜாக்கிசான் படம் வந்தது. அதில் சீனாவின் புராதான விலங்கு சிலைகள் 12 யை இங்கிலாந்தில் மீட்பார். அதில் ஒரு பன்றி சிலையும் இருக்கும். அது இந்தியா வந்திருந்தால் அது தான் இந்தப்படத்தின் கரு

ஆயிரம் ஆண்டு பழமையான பன்றியின் சிலையொன்று சீனாவிலிருந்து இந்தியா வந்து சேர்கிறது. சிலை கடத்தும் கும்பல் கடத்தும் அந்த சிலை ஒரு கட்டத்தில் மறைந்து கிடக்கிறது. அதன் மதிப்பு பத்துகோடிக்கும் அதிகம் எனத் தெரியவரவே., ஒரு ரவுடிக் கும்பல், போலீஸ் அதிகாரிகள் சிலர், தன் முதல் படத்தை இயக்க முயலும் சினிமா உதவி இயக்குநர் என மூன்று தரப்பும் அந்த சிலையை அடைய போட்டி போடுகிறார்கள். யார் அதை அடைந்தார்கள் என்பது தான் கதை.

இளைஞர்கள் இணைந்து செய்த படம் என்பதால் படத்தில் நிறைய ப்ளஸ் இருக்கிறது. படத்தில் ஹீரோ இல்லை ஹீரோயின் இல்லை ஆனால் ஒரு வலுவான திரைக்கதையில் சிக்கவைத்து நம்மை படத்தை ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முக்கிய வேடங்களில் விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், நிஷாந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மூவருமே புதியவ்ரகள் போல் இல்லாமல் அசத்தியிருக்கிறார்கள். கூட வரும் துணைப்பாத்திரங்களும் நன்றாக செய்துள்ளார்கள்

பெண் கதாப்பாத்திரம் இல்லாத படம் என்பதே கொஞ்சம் புதுமை தான். படத்தின் லொகேஷங்கள் கலர் டோன் எல்லாம் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மாத்திரைகள் மூலம் டம்மியாக குழப்பத்தை ஏற்படுத்த முயலும் ஐடியா நன்றாக உள்ளது. ஆனால் அந்த மாத்திரையும் வேலை செய்யவில்லை என்பதே சோகம்.

விஜய் சத்யா இதுவரை சிறிய கதாபாத்திரங்கள் செய்திருந்தாலும், இப்படத்தில் முழுநேர வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார். நகைச்சுவை ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ப்ளாஷ்பேக்காக அங்காங்கே விரியும் திரைக்கதை கொஞ்சம் குழப்பத்தை தருகிறது அதை சரி செய்திருக்கலாம்

சுரேன் விகாஷ் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை நன்றாக இருக்கிறது

நல்ல படம் பார்க்க ஏங்குபவர்கள் தற்போது நேரடியாக சோனி லைவில் வெளியாகியிக்கும் இந்த சினிமாவை நிச்சயம் பார்க்கலாம்.

மதிப்பீடு: 3.5/5

Leave a Response