இயக்கம் – து ப சரவணன்
நடிகர்கள் – விஷால், யோகிபாபு, ரவீனா ரவி
பாசமான தங்கையை கொன்ற வில்லனை கண்டுபிடித்து அவனை பழிவாங்கும் நாயகன் தான் இப்படத்தின் கரு
அப்பா போலீஸ் வேலை பார்க்க, தானும் எஸ் ஐ ஆவதற்காக தயாராகிகொண்டிருக்கிறார் நாயகன் விஷால், அன்பான அம்மா, தங்கை என ஒரு அழகான குடும்பம். அந்த ஏரியாவில் சுற்றித்திரியும் ரௌடி, விஷால் தங்கையிடம் பிரச்சனை செய்கிறான். இன்னொரு பக்கம் இன்னொரு பெண்ணுக்கு வீடியோ எடுத்து மிரட்டும் இளைஞர்களால் பிரச்சனை. மேலும் மற்றொரு பக்கம் கழிவுகளை வெளியேற்றும் பேக்டரியை மூட சொல்லும் போராளிக்கும் அரசியல்வாதி வில்லனுக்கும் பிரச்சனை. இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகிறது என்பது தான் படம்.
முன்று தனித்தனி கதைகள் அதை ஒன்றாக இணைக்கும் விதமும் பரபரப்பாய் கொண்டு செல்லும் விதத்திலும் ஒரு நல்ல கமர்ஷியல் படத்தை தந்திருக்கிறார்கள்.
முதல் பாதியில் முதல் அரை மணி நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமெச்சூர்த்தனமான காட்சியமைப்பு, நடிப்பு, ஒன்னுமே இல்லாத திரைக்கதை என நம்மை சோதிக்கிறார்கள். படத்தின் இடைவேளையில் தான் உண்மையில் கதையே ஆரம்பிக்கிறது.
படத்தை ஆரம்பித்திருக்க வேண்டிய இடம் அது தான்.
இடைவேளைக்கு வில்லனை தேடும் காட்சிகள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் அதையும் உடைத்து போட்டுவிடுகிறது. படத்தின் நீளம் படத்திற்கு பலவீனம்.
சாவு விழுந்த வீட்டில் ஃபுல் மேக்கப்புடன், லிப்ஸ்டிக்குடன் நாயகி சோத்து தட்டுடன் அலைவதெல்லாம் ஓவர். அவருக்கு மேக்கப் ஏனோ ஒட்டவே இல்லை. யோகிபாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ரவீனா ரவி தங்கை கதாப்பாத்திரத்திற்கு செட்டாகவில்லை. அவர் பழைய ரூட்டை தொடர்வது அவருக்கு நல்லது.
ஒரு தரப்பினருக்கு பிடிக்குமென இல்லாமல் படத்தில் ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி என சரிவிகிதத்தில் கலந்திருப்பது படத்தின் பெரிய பிளஸ்.
நடிகர் விஷால் நீண்ட இடைவேளைக்கு பிறகு நாயகனாக இல்லாமல் சாதாரண இளைஞனாக கவர்கிறார். பாண்டிய நாடு, தாமிரபரணி படங்களில் பார்த்த ஃப்ரஷ்ஷான இளைஞன் விஷால் இதில் மீண்டும் தெரிகிறார். தங்கையை கொன்றவனை தேடி செல்லும் இடத்தில் ஈர்க்கிறார். தங்கையாக ரவீனா ரவி படத்தின் கதைக்கு உயிரோட்டமாய் வந்திருக்கிறார்.
நாயகி டிம்பிளுக்கு பெரிதாக வேலை இல்லை. அதிலும் அவரது ஓவர் மேக்கப் கொஞ்சம் கடுப்பு
வில்லனுக்கும் நாயகனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. வில்லனை நாயகன் தேடும் காட்சிகள் வெகு பரபரப்பாக கண் இமைக்க முடியாமல் காட்சிகளாக விரிவது அட்டகாசம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பற்றியும் படத்தில் இணைத்திருப்பது அழகு
படத்தில் பல இடங்களில் லாஜிக்கை மறந்து விட்டார்கள், விஷாலின் காதல் காட்சிகள் படத்திற்கு தேவையே இல்லை. ஒளிப்பதிவு மிக மோசமாக அமைந்துள்ளது. பல காட்சிகள் படத்தில் தெளிவாக இல்லை. பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
ஒரு நல்ல கமர்ஷியல் படம் பார்க்க ஏற்ற படம். மொத்தத்தில் வீரம் வாகை சூடியுள்ளது
மதிப்பீடு: 3/5