நடிகர் சங்க தேர்தல் முடிவு! அமைதி காக்கும் நாசர் அணி!! தொடர் மீட்டிங்கில் பாக்யராஜ் அணி!!!

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் 2019ம் ஆண்டு சென்னையில். நடைபெற்றது. அந்த தேர்தலில் நடிகர்கள் விஷால், கார்த்தி, பூச்சி முருகன் உட்பட ஒரு அணியினர் நடிகர் நாசர் தலைமையிலும், ஐசரி கணேஷ், பிரஷாந்த், உட்பட ஒரு அணியினர் பாக்யராஜ் தலைமையிலும் போட்டியிட்டனர்.

பாக்யராஜ் அணியின் ஐசரி கணேஷ் தூண்டுதலின் காரணமாக, இந்த தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தோடுக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிமன்றம், 2019ம் ஆண்டு நடைபெற்ற நடுவர் சங்கம் தேர்தல் செல்லாது என அறிவித்தது. பிறகு நாசர் தலைமையிலான அணியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை முடங்கியது.

வாக்கு எண்ணுவது பற்றிய வழக்கு மட்டும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2019ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குகளை மார்ச் 20ம் தேதி அன்று எண்ணலாம் என தீர்ப்பு வழங்கியது.

வாக்கு எண்ணலாம் என்ற தீர்ப்பை வழங்கிய உடன், பாக்யராஜ் தலைமையிலான அணியினர், குறிப்பாக ஐசரி கணேஷ் அவர்களின் முன்முயற்சியால் இந்த வாக்கு எண்ணிக்கை பற்றிய ஆலோசனையை மேற்கொண்டது. ஆனால் நாசர் தலைமையிலான அணியோ இதுவரை அப்படிப்பட்ட ஆலோசனையை மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி நாசர் அணியை சேர்ந்தவர்கள் நாசர், விஷால் மற்றும் கார்தியிடம் முறையிட்டு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தலாமே என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்து யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என அறிவிக்க போகிறார்கள் எதற்கு நாம் இப்போது ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை பற்றி நாசர் அணியை சேர்ந்த சிலரிடம் நம் செய்தியாளர் விசரித்துள்ளார். அதற்கு அவர்கள் கூறியதாவது, “எங்கள் அணி சென்றமுறை வெற்றிபெற்ற போது எங்கு ஊழல் நடக்கவில்லை, அனாவசிய கட்டப்பஞ்சாயத்து நடத்தவில்லை, உறுப்பினர்கள் நலனுக்காக பாடுபட்டோம், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி வந்தோம். ஆனால் எங்களுடைய நற்செயல்களை வேண்டுமென்றே தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாக்யராஜ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் தொல்லைகளை கொடுத்து வந்தார், சிலர் மூலமாக மறைமுகமாக வழக்கு தொடுத்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டமுடியமல் தடைபட்ட வழி வகுத்தார். ஐசரி கணேஷ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எவ்வாறு நாசர் தலைமையிலான அணியினருக்கு தொல்லைகள் கொடுத்தார்கள் என்பது அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும். அவர்கள் நிச்சயமாக நாசர் தலைமையிலான அணிக்கு தான் அவர்கள் வாக்குகளை அளித்திருப்பார்கள். நாசர் தலைமையிலான அணி தான் அமோக வெற்றி பெறும்.” என முடித்து கொண்டார்.

நாசர் அணியினரின் நிலைப்பாடு அப்படி இருக்க, ஐசரி கணேஷ் அண்ட் டீம் சில தினங்களாக தொடர் மீட்டிங் போட்டு கொண்டு வருகிறார்கள். அந்த மீட்டிங்கில் அவர்கள் ஆலோசித்து வருவது பற்றி கேட்டால் நமக்கே ஷாக் ஆகுது. அதாவது தேர்தல் முடிவில் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற்றால் சென்னையே கலக்கும் விதமாக இந்த வெற்றியை கொண்டாட வேண்டுமாம். அப்படி நாசர் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றால், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றது என அனைவரும் கூக்குரல் எழுப்பி, ஊடகத்தின் பார்வையை அவர்கள் பக்கம் திரும்ப வைக்கவேண்டும் என்ற முடிவில் உள்ளார்களாம். அதே நேரத்தில் இந்த தேர்தல் முடிவை செல்லாது என அறிவிக்க வேண்டி நீதிமன்றத்தை நாடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இது மட்டுமின்றி, இந்த தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் சில பல வேலைகள் நடக்கலாம் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave a Response