முதல்வர் – நடிகர் விஜய் திடீர் சந்திப்பு !!! – ரகசியம் என்ன?

உள்ளாட்சி தேர்தல் காரணமாக தற்போது பரபரப்பாக காணப்படும் தமிழக அரசியலில் நடிகர் விஜய் அவர்களை முதல்வர் அவர்கள் விஜயின் வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய், “விஜய் மக்கள் இயக்கம்” என்ற இயக்கத்தை உருவாக்கி தனது ரசிகர்கள் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்பட பல மாநிலங்களில் மக்களுக்கு உதவும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார்.உதாரணமாக மழை,வெள்ளம்,கொரோனா ஊரடங்கு காலங்களில் மக்களுக்கு தேவையானவற்றை, தனது ரசிகர்கள் மூலம் நேரடியாகவே மக்களுக்கு சென்றடையும் படி செயல்பட்டும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு நிவாரண நிதியும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி சமூகத்தில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துவருகிறார்.மத்திய,மாநில செயல்பட்டால் பொதுமக்கள் அனுபவித்த இன்னல்களை தனது திரைப்படங்களில் வசனங்களாக பேசி பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியும் வருகிறார்.நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் இறங்கப்போகிறார் என்றும் பல்வேறு கருத்துக்களை பல தரப்பினர் கூறிவருகின்றனர்.

அதற்க்கேற்ப தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விஜய் அனுமதியும் வழங்கினார்.தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் வெற்றியும் பெற்று அசத்தினர்.அதன் காரணமாக தற்போது நடைபெறவிருக்கும் இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இந்த நிலையில்
புதுச்சேரி மாநில முதல்வர் N.ரங்கசாமி அவர்கள் நேற்று(04.02.2022) மாலை தளபதி விஜய் அவர்களை நீலாங்கரை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இதனால் நடிகர் விஜய் அவர்களின் நேரடி அரசியல் பிரவேசம் எப்போது இருக்கும் என்ற எண்ணம் பல்வேறு அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள்,ஆர்வலர்கள் மத்தியிலும் விஜய் அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது அகில இந்திய “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார்.

Leave a Response