இந்த வருடம் சராசரி மழை பெய்யுமா; விவசாயிகளின் பிரச்சனை தீருமா: இந்திய வானிலை மையம்!..

rain1
இந்த வருடம் நாடு முழுவதும் சராசரி மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது, விவசாயிகளுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது.
பொதுவாக 96 முதல் 104 சதவீதம் வரை மழை பதிவாகும் பேது சராசரி மழை பதிவாக கருதப்படும். அதற்கு கீழ் மழை பதிவாகும்போது சராசரிக்கு கீழ் எனவும், 104-110 சதவீதம் பதிவாகும் போது சராசரிக்கு மேல் என கருதப்படும்.
கடந்த வருடம் நாடு முழுவதும் சராசரியை விட அதிகமாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியது. ஆனால் சராசரி மழை மட்டுமே பதிவானது. அதே நேரத்தில், தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் குறைந்தளவே மழை பதிவானது. இதனால் அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் ரமேஷ் கூறுகையில், இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சராசரி அளவு பதிவாகும். நாடு முழுவதும் பரவலாக மழை இருக்கும். 96 சதவீதம் வரை நாடு முழுதும் மழை பதிவாகும். என்று தெருவித்துள்ளார்.

Leave a Response