உயர் நீதி மன்ற உத்தரவு! ஒ.பி.எஸ். மகனை கைது செய்யத்தடை…

ops-_brother_raja-_son_ravindranath_16289
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சண்டையில் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் விரட்டியடித்தனர்.

இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய முயன்றதாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அவரது சகோதர் ஓ.ராஜா மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்சின் தம்பி மற்றும் மகன் ஆகியோர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இருவரையும் கைது செய்வதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்து விளக்கமளிக்க ஆர்.கே நகர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Response