பாம்பு கடித்து பக்தர் மரணம்!சாமியார் தப்பி ஓட்டம்…

sneck
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஜதாவாஸ் கிராமத்தில் போபா என்ற சாமியார் வசித்து வந்தார். அவர் பாம்புகளை வைத்து, பொதுமக்களிடம் வித்தை காட்டி வந்துள்ளார். அங்குள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களின் கழுத்தில் பாம்பை சுழல விட்டு, பின்னர் அதனை கட்டுப்படுத்தும் வித்தை தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு ஏராளமான பொதுமக்கள், கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வெளியூரைச் சேர்ந்த பாபுராம்(36), ஜதாவாஸ் கிராமத்திற்கு திருவிழா ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது கோவிலில் சாமியாரைக் கண்டுள்ளார். இதையடுத்து சாமியாரின் வலையில் விழுந்து, அவருடைய கழுத்தில் பாம்புகளால் சுற்றப்பட்டுள்ளார்.

ஆனால் திடீரென பாம்புகள் பாபுராமை கடித்துள்ளது. இதைக் கண்ட சாமியார், உடனடியாக தனது இல்லத்திற்கு அழைத்து சென்று குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் பாபுராமின் நிலைமை மோசமடையவே, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அந்த செய்தியறிந்த சாமியார் போபா, தப்பியோடினார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Response