இன்று முதல் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் துவங்கம் ஸ்டாலின்!

therdhal
இன்று சென்னை ஆர்கே., நகரில் திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அதிமுக.,வில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் பிரிந்து செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில், சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிமுக கட்சியின் பெயரும், அதன் இரட்டை இலை சின்னமும் பயன்படுத்துவதற்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால், சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் ஆகியோர் தனித்தனி சின்னங்களில் களம் இறங்குகின்றனர்.

இதேபோன்று, திமுக சார்பாக மருதுகணேஷ், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக, அதன் நிறுவனர் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிடும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில், ஓபிஎஸ், சசிகலா அணிகள் தங்களது பிரச்சாரப் பணிகளை ஏற்கனவே முழுவீச்சில் நடத்திவருகின்றன.

தற்போது, திமுக சார்பாக, அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இன்று மாலை 6 மணிக்கு ஆர்.கே.நகர் ஏ.இ. கோயில் தெருவில் நடக்கும் இந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கு, தலைமை தாங்கும் ஸ்டாலின், தி.மு.க.. வேட்பாளர் மருதுகணேசை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார். மேலும் இதில் தி.மு.க.வின், கூட்டணி கட்சிகளும் இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

Leave a Response