கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் முதலில் மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், அதன் பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் , வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவரை தொடர்ந்து எம்.பி. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், டி.ஆர் பாலு, மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் நினைவிடத்தில், அசோக்குமார், மகாலட்சுமி என்ற இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின் , மணமக்களுக்கு சீர் வரிசைகளும் வழங்கினார்.

இதனையடுத்து அண்ணா அறிவாலயம் வந்த திமுகவினர், அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Leave a Response