சென்னை கொரோனா பாதிப்பு – முதல் இடத்தை தக்கவைக்கும் “ராயபுரம்”..

சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 125 பேரும், தேனாம்பேட்டை 101 பேரும், அண்ணாநகரில் 70 பேரும், அடையாறு 66 பேரும், திரு.வி.க.நகரில் 60 பேரும், கோடம்பாக்கம் 54 பேரும், அம்பத்தூரில் 32 பேரும், திருவொற்றியூரில் 24 பேரும், மாதவரத்தில் 22 பேரும், வளசரவாக்கத்தில் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சோழிங்கநல்லூரில் 17 பேரும், பெருங்குடியில் 15 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், மணலியில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் 3060, தண்டையார்பேட்டை 2007, கோடம்பாக்கம் 1921, தேனாம்பேட்டை 1871, திரு.வி.க.நகர் 1711, அண்ணா நகர் 1411, அடையாறு 949, வளசரவாக்கம் 910, அம்பத்தூர் 619, திருவொற்றியூர் 559, மாதவரம் 400, சோழிங்கநல்லூர் 279, பெருங்குடி 278, மணலி 228, ஆலந்தூர் 243

ராயபுரத்தில் கடந்த 16ம் தேதி தொற்று எண்ணிக்கை 1000 ஐ கடந்தது. அடுத்த 10 நாட்களில் 26ம் தேதி 2000 ஐ கடந்த நிலையில், அடுத்த 8 நாட்களில் இன்று 3000ஐ கடந்துள்ளது.

ராயபுரத்தில் மொத்தம் இதுவரை 233 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிளாக மாற்றப்பட்டன. இதில் 166 பகுதிகள் விடுவிக்கப்பட்டு, தற்போது 67 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளன. இந்த மண்டலத்தில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் இங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதேபோல், சென்னையில் இரண்டாவது மண்டலமாக தடண்டையார்பேட்டையில் தொற்று எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. இந்த மண்டலத்தில் கடந்த கடந்த 25ம் தேதி தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்தது.

அடுத்த 9 நாட்களில் இன்று 2000ஐ கடந்ததுள்ளது. கடந்த 10 நாட்களில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் தொற்றின் பரவல் வேகம் என்பது மற்ற மண்டலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.

Leave a Response