தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை , தாமரை மலராது – கனிமொழி..!

தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, நாளை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ளது. இந்த நிலையில், கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், போர் விமானங்களில் கூட ஊழல் பண்ணக்கூடிய ஆட்சி தான் பாஜக என்று குற்றம் சாட்டினார்.

நமது நாட்டைப் பாதுகாக்க வாங்கக்கூடிய போர் விமானங்களில் கூட, ஊழல் செய்து இந்த நாட்டையே ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய ஆட்சியை நடத்தியவர் யார் என்றால், அது பிரதமர் மோடி தான் என்று கூறினார்.

ஆதலால், இந்த அளவிற்கு நம்மையெல்லாம் தொடர்ந்து ஏமாற்றி கொண்டு, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய தேர்தல் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்றும், தமிழ்நாட்டில் தாமரை மலராது எனவும் கூறிய கனிமொழி, அவர்களுக்கு தக்க பாடத்தை சொல்லித் தர வேண்டும் என்று பேசினார்.

Leave a Response