எந்தவொரு நிலையிலும் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யக்கூடாது – விஜய் கருத்து..

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் படமாகும். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தத் திரைப்படமானது திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் ட்ரைலரை படக் குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்போது கொரோனோ தீவிரமாக தலைவிரித்தாடும் நிலையில் ஜூலை மாதம் வரை திரையரங்குகள் திறக்கப்படாது என்று கூறப்படுகின்றது. மேலும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் வருவார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் மாஸ்டர் படமானது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக படக்குழு முடிவெடுத்ததாகவும், அதேபோல் ஓடிடியில் அதிக விலைக்கு கேட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

நடிகர் விஜயிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியபோது, அவர் தன்னுடைய படங்களை ஓடிடி தளங்களில் எந்தவொரு நிலையிலும் வெளியிடக்கூடாது என்றும், திரையரங்குகளில் மட்டும் வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளதாக படக்குழு கூறியுள்ளது.

திரையரங்கு திறக்கப்பட்ட உடன் மாஸ்டர் படம் உடனடியாக திரைக்கு வரும் என்று தெரிகிறது.

Leave a Response