பிரபல நடிகர் படத்தில், உண்மையை சொல்லும் காட்சிகள்! சர்ச்சையை கிளப்புமா?

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அவர் நடித்த கடைசி விவசாயி, மாமனிதன் போன்ற திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமான க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, மோகன் ராம், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்க, பெ. விருமாண்டி படத்தினை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்று 5 மணிக்கு, படத்தின் நாயகன் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை போல் தற்பொழுது இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

ட்ரைலரில், உண்மை சம்பவத்தை அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் சில வசனங்கள், “சாதி மத அரசியலை தாண்டி இன்னிக்கு தண்ணியையும் காற்றையும் வச்சிதான் மொத்த உலக அரசியலும் நடக்குது”….”நாங்க இந்தியாவே இல்லனு எழுதிக்கோ போ”, ரேஷன் கார்டு , ஆதார் அட்டை சம்மந்தப்பட்ட பல வசனங்கள் நிரப்ப பட்டு சமூக பாய்ச்சலாக க/பெ ரணசிங்கம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் வசனங்களை பார்க்கும்போது அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளை, விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் வெளுத்து வாங்கியுள்ளார் போல் தோன்றுகிறது. மொத்தத்தில் இப்படம் வெளிவருவதற்குள் ஏதாவது சர்ச்சையை கிளப்புமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

குறிப்பு: ரேஷன் கார்டு , ஆதார் அட்டை சம்மந்தப்பட்ட பல சர்ச்சை வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த திரைப்படத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆதரவாளரும், ஊடகவியாளரான ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரைலரில் தீப்பொறிக்கும் வசனங்களையும், காட்சி அமைப்புகளையும் பார்க்கும்போது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு க/பெ ரணசிங்கம் ஒரு ட்ரீட்டாக இருக்கும். இப்படத்தை கே.ஜே.ஆர் பிலிம்ஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.

Leave a Response